பாலை
நினைவுகளில்
முகம் புதைத்து
மௌனமாய்
வடிகிறேன்
வித்தகனை
இழந்த
வீணை மாதிரி
நீ என்
நிலா என்றாய்
என் சிறகே
நீதான் என்றாய்
என்
உயிரின் நிழலில்
உறங்குவாய்
என்றிருந்தேன்
நீ
பருவத்தின்
நிழலில்
பசியாறிப் போனாய்
உனது ஒப்பனைகள்
இந்நேரம்
வேறொரு மேடையில்..
உனக்கென்ன
உனக்கென்ன?
உன் தன்மை
நிலை திரிந்ததால்
பாலையானது
என் குறிஞ்சி அல்லவா ? (1991)