பிணைப்பு
வசதியான சூழல்
வயிராறச் சோறு
ஒய்வாய் உலாவிவர
ஓரிரு அனுமதிகள்
சுகாதாரத்திற்கு
சோப்புக் குளியல்
விசுவாசத்திற்கு
விருதுகள், பாராட்டுக்கள்.
துப்பறிதலில்
சிறந்த நிபுணத்துவம்!
இத்தனை சிறப்புகளோடு
எஜமான் விசுவாசத்தில்
கட்டுண்டு கிடக்கிறது
நாய்!
~கவுதமன்~

