விண்விட்டு வீழ்கின்ற மழைத்துளி
விழுகின்ற மழைத்துளி
என்றென்றும் வருந்தும் ..,
வானைவிட்டு பிரிகிறோமே என்று...!!!
ஆனால்,
மழை பொழியும் வானோ..
தினம் விழும் துளிகளில்,
ஒரு துளியகதான் என்னும்
மழை துளியின் பிரிவோ ???
அதனுள் எவ்வித தாக்கத்தையும் ..
தருவதில்லை...
அத்துளியோ வின்விட்டு
தரை மீது வீழ்கின்ற விண்மீன்போல
வானிலே நிலவோடு வாழ்ந்த காலங்களை
எண்ணி எண்ணி நிலம் மீது ஓடும்... ஆறாக..!!!
ஓடும் மழைத்துளியிங்கு நான்.....
உணராத வானிங்கு யாரோ????

