அன்னை இல்லம்
பெற்ற பிள்ளைகள் இருந்தும் பிறரிடம் பிச்சை எடுக்கும் நிலைதான்
நிலா சோறு ஊட்டி தங்க மகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் கொடுத்து பசிக்கும் நேரம் எல்லாம் பஞ்சமின்றி வகை வகை யான உணவுதான்
வசதில்லாத போதும் வைத்தை கட்டி வாயை கட்டி சேர்த்த சொத்து உனக்குத்தான்
பட்டம் பெற்ற என் பிள்ளை பட்டணத்திலே வேலைக்கு செல்ல
நாங்கள் பட்டினி கிடந்து பணத்தை அனுப்பினோம்
அந்த ஒத்த புள்ள ஒய்யாரமா ஒருத்தனை காதலித்த கதைகேட்டு
காடு மேடெல்லாம் திரிந்து கஷ்டப்பட்டு சேர்த்த காஞ்சி ஊத்தும் கால் மெனையையும் விற்று
என் செல்ல மகள் மனம் மகிழ திருமணம் நடத்திய மறு நாளே
என் மருமகன் எங்கள் சொத்துக்கலையெலாம் வியாபாரம் செய்ய வாங்கி கொண்டு
வாங்கியவன் எங்களை வீதியிலே நிறுத்த
நான் பெத்த மகள் சிரித்துக் கொண்டே வழியனுப்ப
போக இடமில்லாமல் சாக சென்ற என்னை கை பிடித்து அழைத்த
ஒரு ஆண்மகன் என் கதைகேட்டு கண்கலங்க என் கைபிடித்து அழைத்து சென்றான் என்னை போல் அனைவரும் இருக்கும்
அன்னை இல்லத்திற்கு .
படைப்பு:-
ravisrm