இந்த கதையை படித்தால் நீங்களும் கூட கோடீஸ்வரர் ஆகலாம்

வாமனன் என்னும் ஒருவன் பெரும் சோம்பேரி, அவன் கல்வியறிவு சிறிதே உடையவன், ஆனால் உலகறிவு கொண்டவன்,

ஓய்வெடுக்கும் வயதிலும் உழைக்கும் வாமனனின் தாய் தந்தையர் வயதானவர்கள்,

இவனது சோம்பேரி தனத்தை போக்க நினைத்த தாய் தந்தையர் வாமனனிடம் வந்து நீ உனக்கென்று ஒரு தொழிலை தேடி உழைத்து வாழ வேண்டும் இல்லையெனில் சொத்தில் உனக்கு பங்கு கிடையாது என்று கூறினர்,

வாமனனும் நான் விரைவாக எனக்கென்று ஒரு தொழிலை அமைத்து கொண்டு வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான்,

வாமனன் பல இடங்களில் வேலை தேடினான், சில இடங்களில் வேலை கிடைத்தது இவனது சோம்பேரி தனத்தை பொருக்க முடியாமல் அனைவருமே வாமனனை வேலையில் சேர்த்தே நாளே வேலையை விட்டு அனுப்பி விட்டனர், பல இடங்களில் முயன்றும் இதே நிலை தான்,

அப்பொழுது தான் வாமனனின் உள்ளத்தில் ஒரு யோசனை கிட்டியது, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஒரு இடத்தில் ஒரு தொட்டி அளவிற்கு குழி தோண்டி அதில் முழுவதும் தண்ணீர் நிரப்பி அதன் அருகில் பெரிய பலகையில் இது ஒரு மந்திர கிணறு இந்த கிணற்றினுள் ஒரு ரூபாய் போட்டு நீங்கள் எது வேண்டினாலும் அது கூடிய விரைவில் நிறைவேறும் என்று அந்த பலகையில் எழுதி வைத்து விட்டு அதனருகிலே மறைவாக அதை கண்கானித்த படியே இருந்தான்,

அங்கு வந்து செல்பவர்களில் நம்பிக்கை உடையவர்கள் அந்த கிணற்றில் ஒரு ரூபாய் போட்டு வேண்டினர், இதில் நம்பிக்கை இல்லாதவர்களும் ஒரு ரூபாய் தானே போட்டு தான் பார்ப்போம் வேண்டியது நிறைவேறினால் அது சந்தோசம் இல்லைையெனில் ஒரு ரூபாய் தானே போனால் போகட்டும் என்று அனைவரும் அதில் ஒரு ரூபாய் போட்டு வேண்டி சென்றனர், வாமனன் காலை முதல் இரவு வரை அந்த கிணற்றையே கண்காணித்து விட்டு இரவானதும் அதில் இருக்கிற காசுகளை சேகரிப்பதும் என இப்படியே நாட்கள் ஓடியது, சில மாதங்களிலேயே வாமனன் பல ஆயிரம் ரூபாய்க்கு சொந்தக் காரன் ஆனான், ஒரு சில வருடத்திலேயே லட்சாதிபதி ஆனான், அந்த பணத்தை வைத்து சொந்தமாக பல தொழிலை தொடங்கினான் சில வருடம் கழித்து பல கோடிகளுக்கு அதிபதியானான்

ஒரு ரூபாய் ஆனாலும் அது கோடியில் ஒன்று, அது பல கோடிகளை சேர்க்க வல்லது

எழுதியவர் : விக்னேஷ் (28-Nov-15, 7:18 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 861

மேலே