நான் இன்று நினைப்பது போல்

முதியோர் இல்லத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சென்று சிலரிடம் எப்படி இங்கு வந்தீர்கள் எதற்காக என்ன காரணம் என பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார் அப்போது ஒருமுதியவரிடம் .......

பத்திரிக்கையாளர் : ஐய்யா நாங்க பத்திரிகையில் இருந்து வருகிறோம் எங்கள் பத்திரிகையில் முதியவர்களையும் அவர்களின் வாழ்க்கையின் அனுபவத்தையும் எங்கள் தளத்தில் அனைவரும் படிக்க ஒரு கட்டுரையாக வெளியிட உள்ளோம் அதனால் உங்களின் அனுபவத்தை எங்களிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்...

முதியவர் :எந்த அனுபவத்த சொல்ல சொல்றிங்க தம்பி

பத்திரிக்கையாளர் : ஐய்யா வழக்கமான கேள்வியா இருந்தாலும் அதையே முதல்ல கேட்கிறேன் நீங்க எப்படி இந்த முதியோர் இல்லத்துக்கு வந்தீங்க ...

முதியவர் : என்னோட பையனுக்கு குடும்பத்தோட வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கேயே குடும்பத்தோட வாழ்ந்துட்டு வர்றான் போகும்போது எனக்கும் என் மனைவிக்கும் visa கிடைக்கவில்லை என்பதால் எங்கள் இருவரையும் முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு போய்ட்டான் மாதா மாதம் பணம் அனுப்பி வைப்பான் எப்பொழுதாவது தொலை பேசியில் பேசுவான் ...

பத்திரிக்கையாளர் : உங்களுக்கு இது வருத்தமா இல்லியா ...

முதியவர் : கண்டிப்பா வருத்தப்படுகிறேன் என் மகனை நினைத்து அல்ல என் தாய் தந்தையை நினைத்து ...

பத்திரிக்கையாளர் : என்னைய்யா சொல்றிங்க உங்கள இங்க விட்டுட்டு போனது உங்க மகன் அப்படி இருக்கும் போது நீங்க ஏன் உங்க தாய் தந்தையை நினைத்து வருத்தப் படுகிறீர்கள் ...

முதியவர் : தம்பி நான் இப்படித்தான் கிராமத்தில் இருந்து பட்டணத்தில் வேலை கிடைத்து விட்டது என்று குடும்பத்தையும் என்னோடு அழைத்து வந்துவிட்டேன் ஆனால் என் தாய் தந்தையரை கொண்டுவரவில்லை காரணம் அன்று பட்டணத்தில் இருந்த நாகரீகத்திற்கு என் தாய் தந்தை உகந்தவர் அல்ல அவர்களை வைத்துக்கொண்டு எங்களால் பட்டணத்தில் வாழமுடியாது என்று நானும் என் மனைவியும் நினைத்ததால் நாங்கள் அவர்களை பட்டணத்திற்கு கொண்டுவர விருப்பம் இல்லாமலும் பட்டண வாழ்க்கை எங்களை கிராமத்து வாழ்க்கைக்கு அழைத்து செல்வதை நாங்கள் விரும்பாத காரணத்தால் நாங்கள் எங்கள் தாய் தந்தையரை ஒரு மாதம் அல்லது ஆறு மாதம் கழித்து தான் பார்க்க சென்றோம் அதைத்தான் என்று என் மகன் எனக்கு சொல்லி இருக்கிறான் வெளிநாட்டில் எங்களுடன் வாழ்வது அவர்களுக்கு கடினமாக இருப்பதால் அவர்கள் நாங்கள் செய்ததை எங்களுக்கு செய்கிறார்கள் இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை காரணம் நான் செய்வதை என்மகனும் செய்வதால் எனக்கு கண்டிப்பாக தெரியும் அவன் இன்று என்னை நினைக்காவிட்டாலும் என்றாவது நினைப்பான் நான் இன்று நினைப்பது போல் .....

எழுதியவர் : சாமுவேல் (28-Nov-15, 4:20 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 237

மேலே