கடைசி ஆசை
தூக்கு தண்டனை கைதியிடம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.
..100தபால் கார்டும், ஒரு பிளாஸ்க் நிறைய டீயும் மட்டும் கொடுங்க
போதும்னான்.
டீ குடித்துக் கொண்டே விடிய விடிய எழுதினான்.
சூப்பிரெண்ட்டை அழைத்து சார் எனக்காக இந்த உதவியை செய்யணும்,
இதில என் அம்மாவுக்கு நான் எழுதற மாதிரி லட்டர் எழுதியிருக்கிறேன்...
அம்மா ரொம்ப வயசானவங்க மீறி..மீறி இருந்தா இன்னும் 3 இல்லைன்னா 4 வருஷம் இருப்பாங்க...
அது வரைக்கும் மாசத்துக்கு இரண்டு லட்டரை போஸ்ட் பண்ணிக்கிட்டு இருங்க, அம்மா நான் நல்லா இருக்கறேங்கிற நினைப்பிலயே போய் சேர்ந்திடுவாங்க...
தயவு செஞ்சு இதை மட்டும் செஞ்சிடுங்க..சார்.