மனம்பூரா நெறஞ்சிருக்க‌

தமிழ் நாட்டு நெலமாக நானிருக்க‌
அடி... கருவேலஞ் செடியாக நீயிருக்க‌
மனம்பூரா என்னில் கலந்தே நெறஞ்சிருக்க‌
அடி... ஒசரத்தில் தானே கொஞ்சம் கொறஞ்சிருக்க...

எனக்காக‌ படைச்சானே இறைவன் உன்ன
உனக்காக படைச்சானே இறைவன் என்ன‌
கணக்காக‌ முடிச்சு போட்டு வச்சானே
மனச மனசாலே இறுக்கி தச்சானே

மரத்த வெட்டும் தமிழன் நம்ம‌
காதல வெட்ட வருவானோ....
மரம் வைக்கும் சிலரைப் போல‌
காதல வளர்க்க விடுவானோ....

மரம் தானே பூமிய செழிப்பா வச்சிருக்கு
காதல் மழையில் தானே பூமி பிழைச்சிருக்கு
உரம் போல வாழ்த்து கிடைச்சா உசரம் போலாமே
காதல் மரத்தின் கிளைகளில் மலராய் வாசம் தரலாமே....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Nov-15, 8:20 am)
பார்வை : 1041

மேலே