உலகம் உண்மையாகட்டும்

நிறை குறை
கூறினால்
கோபம்
என்று எண்ண வேண்டாம்...
உலகம் நம்மை பட்டை தீட்டுகிறது....!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என் குழப்பம் என்னவெனில்
களையை பிடுங்கும் நாம்...
சீமை கருவேலங் காட்டை அழிப்பதில்லை ஏன் ...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காட்சி பொருளாய்
நிற்க வைக்கும் பொம்மை
பெண்ணிற்கு கூட பாதுகாப்பு இல்லை!...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எண்ணத்தில் எதையும் கூறிடும் அரசியல்வாதிகள்
ஏன் எதையும் நிறைவேற்றுவதில்லை...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கல்வி,மருத்துவம்,அரசியல்
எல்லாம்
சேவையா ! இல்லை
வியாபாரமா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாதனை செய்யாமலேயே...
சரித்திரத்தில் இடம்
பிடிக்க நினைக்கும்
சிலைகள்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மனசாட்சி என்பது
மனிதனுக்கு இருக்கிறதா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எடுத்துக் கொண்டு போக முடியா
இந்த மாயையின் மேல்
அன்பு வைப்பதை விடுத்து...
மானுடத்தின் மேல் கரிசனம்
காட்ட முடியாதா?

அன்பு தான் வைக்க முடியவில்லை ...
கரிசனம் கூடவா காட்ட முடியவில்லை...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மனிதன் படைத்த
காகிதத்திற்கு
மதிப்பளித்தது யார்?
மனிதனை செல்லாக் காசாய்
மாற்றியது எது?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேள்வி மேல் கேள்வி
எதற்கும் பதில் உண்டு
இதற்கும் பதில் இருக்கும்
என்று தேடுகிறேன்
வாழ்க்கையை ....
கேள்விகள் கிடைத்துக் கொண்டே
இருக்கின்றன
பதில்கள் இல்லாமல்...

மானுடம் அறியா
மனிதா ...
உயிர்கள் மேல்
ஏன் அன்பு வைக்கவில்லை...
பதில்களும் உன்னிடத்தில் தான்
இருக்கின்றன...
மனிதனாய் ஒரு நிமிடம்
நின்று பார் பொது இடங்களில்...
எவ்வளவு அநியாயங்கள்...
அதில் உன் அலட்சியங்கள்
எவ்வளவு பெரிதென்று...

----------------(தொடரும்... )

தொடரும் என்று
கூறுவது
அநீதிகள் முடிய வேண்டும்
என்ற முற்றுப்புள்ளியை நோக்கி ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Nov-15, 3:41 pm)
பார்வை : 55

மேலே