பாடல் -முஹம்மத் ஸர்பான்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே என்ற மெட்டில் அனாதைகளை பற்றி நானும் எழுதிய வரிகள்
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்
தொலைந்ததை அணைத்தவன் உள்ளம் வாடுமா
பாதையில்லை பயணமில்லை கருணையின்றி யாருமில்லை
பாதையில்லை பயணமில்லை கருணையின்றி யாருமில்லை
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்
வெள்ளை வண்ண மணிகள் சிதறிய காலை
தொல்லை என்னும் கடலில் ஒதுங்கிய அலைகள்
அன்பு என்னும் மடியை கேட்டீடும் குழந்தாய் என் குழந்தாய்
கருணை என்னும் மாலை கோர்த்திடும் மொழிகள் உன் மழலை
இன்பம் என்ற சொல்லில் கண் கண்ணீர் தூவுதே
இன்பம் என்ற சொல்லில் கண் கண்ணீர் தூவுதே
இணைத்தான் கடவுள் எம்மை தொப்புள்பந்தமாய்
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்
துன்பம் என்ற கல்லை உடைக்கும் கண்கள்
வண்ணம் என்னும் சொல்லை கண்டது இல்லை
வானுக்கொரு எல்லையில்லையே அது போல் உன் கருணை
உடலுக்கொரு ஊனமுள்ளது காப்பாய் உன் அருளால்
தெருவில் விழுந்த கருவை காத்து நின்ற தெய்வமே
தெருவில் விழுந்த கருவை காத்து நின்ற தெய்வமே
வாழும் வரைக்கும் நாம் நன்றி பாடுவோம்
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்
தொலைந்ததை அணைத்தவன் உள்ளம் வாடுமா
பாதையில்லை பயணமில்லை கருணையின்றி யாருமில்லை
மழலை ஓவியம் ஓர் அன்பின் காவியம்