இயற்கையின் சீற்றம் 2

இயற்கையின் சீற்றம் 2

நான் செய்த பிழையோயிது?
மேகங்கள் வெடித்ததிர விடா மழையென
பொழியுது, பொழியுது;
வினையிது என் பேராசையால்
விளைந்ததோயிது?
விடா மழையென பொழியுது, பொழியுது;

ஆற்றின் மணல்களை அள்ளியெடுத்து,
ஏரி குளங்களை முறையற்று நிரப்பி,
வரையற்று நிலங்களை விற்றதால் நானும்,
இயற்கை கொண்ட சீற்றமோ இது?
ஏழை உழவனின் நிலங்களை அபகரிக்க
உண்ண உணவின்றி மடிந்தழிந்த அவனின்
அவல கால சாபமோ இது?

குழந்தைகள் கதற, தாய்கள் பதற
வறையற ஏறும் நீரின் சீற்றமும்
இயற்கையும் இறைவனும் சேர்ந்தெனக்களித்த
பாடமென புரிந்து நானும் பணிந்தே வாழ்வேன்;

போதும் இயற்கையன்னையே,
இனியும் வேண்டாம்,
அல்லல்பட்டு, அவதியில் உழலும்,
நன்மக்கள், முதியோர் துயரம் கண்டு
மனமிளகி நிருத்திடு உன் சோதனையை;

பிழையது உணர்ந்து, ஆட்சியர் விழித்தால்
தமிழகம் மீண்டும் செழித்தெழுந்திடுமே,
மக்கள் துயரம் தீர்ந்தும் விடுமே!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (5-Dec-15, 10:26 am)
பார்வை : 97

மேலே