வாருங்கள் மக்களே
எங்கள் இடங்கள் ஏரிகளாக மாற,
மக்கள் சொந்தஊர்
போகின்றார் பிழைத்தோட,
வந்த வழி அறியாமல்
தண்ணீர் முழுக்கும்
வந்தபடி தங்கியதில் உறக்கமில்லை!
எந்த வழி வருவாய் என்று
காத்திருந்த மழையை
சொந்தமொழியில் திட்டியதில்
நிம்மதியில்லை!
இனி,மழை எந்த வழி வந்தாலும்
இந்த இடம் வேண்டாம் என்று
சொந்த வழி தேடி அலைகின்றார் எங்கள் மக்கள்!
உதவிக்கு கொடுத்திருந்த கோடியை
அமைச்சர் பங்கிட்டார் பாதியை
வரும் இடத்தை மடக்கி அரசியல்வாதிகள் எடுத்தார் மீதியை
வீதியை இழந்து தவிந்திருந்த மக்களோ
வந்த மீதியில் பார்க்கவில்லை ஜாதி!
இதுவே விதி என்று கண்ணீரில் அணையும் படி எரிகிறது ஜோதி!
நடிப்புக்கு மட்டும் நாயகன் என்று
நடிக்க வில்லை நாங்கள் இன்று
என்று சொல்லி பல லட்சம் கொண்டு
வருகிறார் பல பேர் காப்பாற்ற இன்று
இவர்போன்ற நெஞ்சத்தை கொள்ளாமல் கொன்று
இகழ்கின்றோம் படம்
தோற்றதை கண்டு!
பேருக்கு எல்லாரும் விளையாடுவதில்லை!
வரும் காசுக்கும் சிலபேர்
விளையாடுவதில்லை!
இவர்கள் நாட்டிற்கே விளையாடும்
விளையாட்டு வீரர்கள் !
விளையாட்டில் வந்திருந்த லட்சங்கள் என்றாலும்
தம் மக்கள் என்று கொடுத்திட்ட சூரர்கள்! ஆம் இவர்கள்!
வாருங்கள் எல்லோரும்
உதவிகரம் நீட்ட
வருங்காலம் வரை காத்திருப்போம்
விட்டதை புடிக்க!
தொலைகாட்சி பார்த்தால் மட்டும்
வெள்ளங்கள் குறையாது!
தொலைதூர பார்வை எல்லாம்
பெரிதாக தெரியாது!
இறங்கி வந்து சேவை செய்தால்
செல்வமும் குறையாது!
இனிமேலும்,அடம்பிடித்தால்
என் கவிதைக்கு மதிப்பேது???