தவிக்கும் தலைநகர்
சென்னைநகரம் தண்ணியில மிதக்குது,
பார்த்து மனம் கண்ணீர் விட்டு துடிக்குது..
உயிர்பிழைச்சாபோதுமுன்னு ஓடுறோம்.எங்கள்
உடைமைகளை இழந்து தானே வாடுறோம்.
மாடிவீடெல்லாம் தண்ணியில மூழ்கிடுச்சி.குடிசை வீடெல்லாம் வெள்ளத்திலபோயிடுச்சி.
ஒன்றும் புரியாம தவிக்கிறோம் நாங்கள்.
உயிரகாப்பாத்த ஓடிஇங்கவாங்க.
பசியில வாடுறோம்.
வசிக்க இடம் தேடுறோம்.
பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமான காட்சிங்க.
மீட்க யார் வருவா ஏக்கம் கூடி போச்சிங்க..
பச்சகுழந்தை எல்லாம் பாலுக்கு அழுவுதுங்க..
பச்சதண்ணிகூட இல்லாதகொடுமை இங்கே.
மழையின் பிழையா இது மனிதன் செய்த சதியா?
யார்மேல குறைசொல்ல புரியல.நாங்கள்
நீர்மேல மிதக்கிறோம் கரை தெரியல.
மாத்து துணி இல்ல.
சேர்த்து வச்ச பொருள் இல்ல.
தலைக்கு மேல தண்ணி வெளியேற முடியல.
குளிருல நடுங்குறோம், கும்இருட்டில் உறங்குறோம்.
இதுவரை காணாத இயற்கை தந்த சேதம்.
இனியும் வேணாம் இறைவா இது போதும்...