தத்துவ முத்துக்கள் --- சக்கரைவாசன்

தத்துவ முத்துக்கள்
**********************************************
தத்துவம் பேசிப்பேசி பெருங்கூட்டம் சேர்த்திடுவார்
அத்துவைதக் கோட்பாடு அதற்க்கீடு ஏதென்பார்
செத்தவனை மீட்டெடுக்க வழியுண்டு என்றுரைத்து
மொத்தபணம் முழுவதையும் நோகாது பற்றிடுவார்
கத்தவித்தை அரங்கேற சிவலிங்கம் வாய் தள்ள
சுத்தநெறி பற்றாது போகநெறி சங்கமிப்பார்
சித்தமெல்லாம் சில்மிசங்கள் பத்தி எனும் போர்வையிலே
காத்தவிழி நாயகரே காய்ந்திடுவாய் பாவிகளை !

(சமுதாய விழிப்புனர்வுக்காய் )

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Dec-15, 8:50 pm)
பார்வை : 78

மேலே