காந்தர்வக் கயவர்கள்
காந்தர்வக் கயவர்கள்
*********************************************
சந்திரனும் விண்ணேற கலவியதும் மனமேற
இந்திரனாய்த் தனை யொத்து காந்தர்வம் புரிந்திடுவார்
விந்திறங்கி வழிந்துவிட தானவிழ்ந்து மறைந்திடவும்
சுந்தரியும் சந்ததியும் நடைமேடை ஓரத்தில்
அந்தரத்து இவர்நிலையோ அத்திரமாம் விதியுள்ளே
கேந்திரங்கள் எங்கெங்கும் இந்நிலையே இன்றுவரை
மந்திரத்தின் நாயகனே கண்டிப்பாய் இக்கயமை !
(சமூக விழிப்புணர்வு )