கவிதை பிணங்கள்

செக்கச் செவேல் என
சிவந்தது செவ்வானம்
வானத்து பெண்ணின்
உதடாயிருக்குமோ..
கழுகின் சிறகென
விரிந்தது என் கற்பனை
தாண்டிச் சென்றது
எத்துனை பிரபஞ்சமோ...

கழுகுப் பார்வை என்னை
கவிதை எழுத ஏவியது
மெல்லத் தமிழ் வார்த்தைகளை
கொல்லத் துணிந்தே சிறைபிடிதேன் ...
தூக்கிலிட்டேன் என்
பேனா முனைக் கயிற்றில்....

பிணமாகும் என்றிருந்தேன்
இல்லை,
நாசித் துழை புகுந்து
மூளைதனை தெறித்தெடுக்கும்
கவிப்பூவின் மணமாகியது....

தொடர்ந்தே எழுத எழுத
ஆழ்துளை நெஞ்சத்தை
விரைந்து வந்து தூரேடுக்கும்
என் சிறு உள்மனமாகியது .......!

எழுதியவர் : ராஜ்குமார் (5-Dec-15, 9:14 pm)
Tanglish : kavithai pinangal
பார்வை : 61

மேலே