திசையன்விளை திரு எம் ஜி முத்து
எம்ஜிஎம் டிஜீ வேர்ல்ட் பூங்கா!
இந்த சென்னை பூங்காவை தெரியாதவரும் உண்டோ?
இந்தியாவின் பெரிய கேளிக்கை பூங்காக்களில் ஒன்று!
எல்லா வயதினருக்கும் ஏற்ற கேளிக்கைகள்;வேடிக்கைகள்!
ரோலர் கோஸ்டர் என்ன! பொழுதுபோக்கு சவாரி என்ன!
எத்தனை மகிழ்ச்சிகள்!
குடும்பமாக வருபவர்களுக்கும் பூங்கா நல்ல கேளிக்கை!
பூங்காவுக்கு வருபவர்க்கு வாகனங்களை நிறுத்த இட வசதி அதிகம்!
காரை நிறுத்த வேண்டுமா? இல்லை இருசக்கர வாகனமா?
இருபத்து நான்கு மணியும் வாகன நிறுத்த வசதி!
சரி! இந்த பூங்காவின் நிறுவனர் யார்?
அவர்தான் திரு எம் ஜி முத்து, MGM Group of Companies நிர்வாக இயக்குனர்,
திசையன்விளையில் பிறந்தவர்!
இனி இந்த புகழ் பெற்ற பூங்காவை நினைக்கும்போதெல்லாம்
சென்னையை மட்டுமின்றி,
திசையன்விளையையும்
திரு எம் ஜி முத்து அவர்களையும் நினைவில் கொள்வோமாக!