ஒரே ஒரு கவி

மொழிகளில்
முதல் மொழி
"தமிழ் "
.........................
உனக்கும்
எனக்குமான தேடல்
"காதல் "
..........................
ஆபத்திலும்
அணையாத் தீ
"நட்பு "
............................
அண்டத்தில்
அழகான உலகம்
"உயிர் "
.............................
உயிருக்குள்
உறைந்த உன்னதம்
"தாய் "
.............................
உணர்வோடு
புதைந்த நரம்பு மண்டலம்
"தந்தை "
.............................
இறந்தும்
பிறழாத பிறவி
"சகோதரம்"
..............................
நெறி பிறழாத
நீள் அகராதி
" வாழ்வு "
..............................
நிரந்தரமான
நிறை அனுபந்தம்
"மரணம் "
..............................
வரம்
தரும் கரம்
"மனைவி "
...............................
சிரம்
பெறும் வரம்
"கணவன் "
...............................
பேறில்
பெரும் பேறு
"குழந்தை "
...............................
காலத்தாலும்
கலையாதது
"கல்வி "
...............................
தேசத்தை
வெல்வது என்றும்
"குணம் "
...............................
பாசத்தை
கொல்வது என்றும்
"பணம் "
...............................
பிரியத்தில்
இவள் தமிழ்
"பிரியத்தமிழ் "

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (6-Dec-15, 9:43 pm)
பார்வை : 160

மேலே