மழையே உன் இடம் மறந்தாயோ

மழையே உன் இடம் மறந்தாயோ
மறந்தே இங்கு தங்கி விட்டாயோ
வான் தேடுதே
உன்னைத்தான் ஓடிப்போ

இடியின் ஓசை கேட்டதால்
இறங்கி வந்தாயோ பயத்தில்
மின்னல் சாட்டை விண்ணில் விளாச
இன்னல் பயந்து இறங்கி விட்டாயோ

உன்னை பிரிந்த சோகத்தில்
விண்ணில் உன் தாய் அழுகிறாள்
கண்ணில் அவள் விடும் கண்ணீரால்
சென்னையை சுடுகாடாய் ஆக்கினாள்

உடனே தாய் மடி சேர்ந்திடு
எங்களையும் சற்று வாழவிடு ...

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (7-Dec-15, 12:28 am)
பார்வை : 170

மேலே