மாநாடு

மாநாடு
மாநாட்டில்
அறிவித்தன.....
ஒன்று முதல் ஒன்பது
எண்கள்.....
தனித்தனியாய்
இயங்குவதாக...
பூஜ்யத்தின்
மதிப்பை அறியாமலேயே……!
மாநாட்டில்
அறிவித்தன….
நிலவு
தனியாய்
இயங்குவதாய்…
கதிரவன்
மதிப்பை அறியாமலேயே….
மாநாட்டில்
அறிவித்தன…..
முட்டைகள்
தனியாய் பொரிப்பதென…
பறவைகளின்
மதிப்பை அறியாமலேயே…
மாநாடே….
அறிவித்தன….
யாருமே தேவையில்லை என்று….
மிரண்டுதான் போனார்கள்
மாநாடு நடத்தியவர்கள்!
--- கே. அசோகன்.