விவசாயி
எவன் பணக்காரன் ?
தான் மட்டும்
இல்லாமல்
பிறருக்கும்
பொதுவாக்கியவன் ...
பல மொழி
பிதற்றுபவன்
மொழி பெயர்ப்பாளன் ...
மொழியை கடந்து ....
உணர்வை புரிபவன் மனிதன் ...
தங்கம்
என்பது
பெரிதல்ல ...
எல்லோர்
மனதிலும்
தங்க வைக்கப் படுவதே ...
சிறந்தது ...
ஒரு நாள்
ஒரு பொழுது
என்றில்லாமல் (விளம்பரத்துக்காக)
எல்லா நாளும்
எல்லா நிமிடமும்
செய்வதை
பெற்றவனுக்கே ...
தெரியாமல்
உள்ளார்ந்து
ஆழ விதைத்திட வேண்டும்
உழவனை போலே...
நாம்
உண்ணும்
உணவிற்கு
விளம்பரம் உண்டா ...
இந்த விவசாயி தான்
தாயாரித்தது என்று ...
உண்மையில் எந்த
எதிர்பார்ப்பும்
இல்லாமல்
பாடுபடும்
விவசாயி
அவரே உன்னத பணக்காரன் ...
உலகிற்கே உணவு படைக்கிறான்
அன்னையின் அன்போடு
எந்த களங்கமும் இல்லாமல் ....