விசாலமாக்கு உன் பார்வையை

கானல் நீரா ?
கண்ணே வாழ்க்கை ...

பனி போல்
சந்தோசம்
சட்டென்று
மறைந்தது
சோகத் தீயில் ...

வாழ்க்கையை
காத்தாடியாய் ...
பார்க்கிறாய் ...
வானமாய் பார் ...
நிலையாய் நிற்கும் ...
உன்னை சுற்றி
பூமி சுற்றும் ...
நிலம் உனக்கு பாதை போடும் ...
காற்று உனக்கு தென்றல் வீசும் ...
தீ உனக்கு தீபம் ஆகும் ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Dec-15, 1:01 pm)
பார்வை : 305

மேலே