=தேடிவந்து கொட்டும் ஒரு பூதம்=

=தேடிவந்து கொட்டும் ஒரு 'பூதம்'=
[எழுத்து-09-12-2015]
ஏரிகளைத் தூர்வார மறந்து விட்டோம்!
=இருந்தபல மரங்களையும் வெட்டி விட்டோம்!
நாறிவந்த குப்பைகளை அள்ளிக் கொட்டி
=நல்ல,பல நீர்,நிலைகள் மூடிவிட்டோம்!
கூறிவந்த விதிகளையும் குழியில் போட்டுக்
=கொடுக்கின்ற லஞ்சத்தல் புதைத்து விட்டோம்!
ஏறியொரு நாகரிக இடத்தை எட்ட
=எண்ணியிந்த தலைகுனிவை ஏன்வ ளர்த்தோம்?

ஓடுகின்ற நீர்வழியை மறித்து விட்டோ
=ஓங்கிவளர் கட்டிடங்கள், பாலம் செய்வோம்!
தேடுகின்றோம் உயர்வதற்கு வழியை, ஆனால்
=தினம்தினமும் இயற்கைக்கு முரணாய்ச் செல்வோம்!
ஆடுகின்ற ஆட்டமெல்லாம் ஆடி விட்டோம்!
=அனைத்துயிக்கும் உலகமெனும் நினைப்பை விட்டோம்!
தேடிவந்து கொட்டுகின்ற 'பூதம்' ஒன்று
=தெரிவிக்கும் சேதியிதை மனிதா! கேளாய் !

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (9-Dec-15, 9:21 am)
பார்வை : 99

மேலே