வரும் நாட்கள் புதுவாழ்வும் தரப்போமே

எப்படியும் வாழலாம்
எங்களுக்குச் செல்வத்தைக்
கைப்பிடித்தால் போதுமென்றார்
கண்டு,அவரின் நெஞ்சத்தில்
மைப்பிடித்த நிலைபோக்க
மனம்பிடித்த அசையினால்
கைப்பிடித்தே அவர்,நடத்தக்
கார்முகிலே! இறங்கினையோ?

வானம்பார்த்து அழுகின்றார்
வாழ்விக்க வாவென்றால்
தானங் கேட்டு அவரழவே
தரைவந்து புரட்டுகிறாய்?

மழையே!
நூறு வருடங்களுக்கு ஒருமுறை
நீ, இப்படியா இறங்கவேண்டும்
எங்கள் நரகங்களைக் கழுவ!

பொய்பிடித்த வாழ்க்கைமுறை
போக்குவோமே! புதுமை பற்றி
மெய்பிடித்த ஆசைவிட்டு
மீளுவோமே! மனித நேயக்
கைபிடித்து பல்லுயிர்கள்
காப்போமே! கனிவாய், நம்முன்
தைபிடித்து வரும்,நாட்கள்
தரப்போமே புதிய வாழ்வும்!
===== ========
ஏரிமட்டுமா
உடைந்தது அன்று...
எத்தனையோ
கனவுகளுந்தான்..!

தூர் வாரப்படாதவை
கால்வாய்கள் மட்டுமா...
நேர்மையில்லாத அரசியல்
நீசமனக்களுந்தான்...

அம்மா பாலென்ற
அத்தனை குழந்தைகளின்
அழுகையுமல்லவா
அடங்கிவிட்டது
அம்மாவின் ஆணையில்
அம்மாவின் ஆணையில் என்ற
ஆர்ப்பாட்டத்தில்...!

அம்மாவி ஆணையில்
அம்மாவில் ஆணையில்
என்ற அமைச்சர்களின்
வார்த்தைகளில்
தெளிவாக விளங்கியது
அதுவரை நடக்காத
செயல்களும்
நடந்த தவறுகளும்...
** *** ****

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (9-Dec-15, 8:52 am)
பார்வை : 64

மேலே