தயக்கமில்லை உன்னை முயக்க
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருவுற்ற கணம்
கணத்துக்குக் கணம் - என்னை
காந்திக்கிறது
மென் புணர்ந்த நொடிகளை
எண்ணி எண்ணி
சந்தோஷிக்கிறது
பெருமைப்பட்ட - கணநேர
சல்லாப நேரங்களை - ஆழ்மனம்
உருவகம் செய்கிறது
நீ கருவுறுகிறாய்
நிசப்த நிமிடங்களின்
ஓசையில் ஓர் உயிர்
முளைத்தெழுகிறது
உருவாக்க உருவாக்க - என்னுள்
பெருமையும் பேரன்பும்
நிறைந்து வழிகிறது
என் உருவமே
வேறொன்றாய்
வெளித்தெரிகிறது
அண்டத்தின்
அத்தனையையும் அடக்கி
என்னுள் அமுக்கி
அனுமானித்துள்ளதாய்
ஓர் ஆனந்தம்
மீண்டும் மீண்டும்
நொடிக்கொரு தடவை
தீண்டலை தேடுகிறது உணர்வு
மடி வைத்து மார் சொரிந்து
அறிவு வழிய
அணைக்கிறது உன்னை
குலப் பெருமை கூர் அறிவுடன்
மண் பார்க்க "அம்மா. ..........."
அலறலுடன் வர எத்தனிக்கிறாய
வலியின் உச்சம் - உன்
வரவின் உச்சத்தால் - மிச்சமின்றியே
கரைந்து போகிறது
உயிர் மெய்யோடு
உரசிக் கொள்கிறது
நித்திலம் போற்ற
நிறை குலத்தோடு பிறந்தாய்
வளர்ந்தாய் சிரித்தாய்
கதைத்தாய் பாடினாய்
அத்தனையும் உளம் கண்டு
சிலிர்த்தேன். ...திளைத்தேன்
அணைத்தேன் அள்ளிக் குடித்தேன்
தமிழ்த் தேன் !
நொடிக்கொரு தடவை
வன்புணர்ந்து - உன்னை
வாரிசாக்க நிக்கிறது
தமிழே ! வா
தயக்கமில்லை உன்னோடு முயக்க
கருக்கொள்ள வேண்டும் நான். ........
கணத்துக்குக் கணம்
உருவாக்க வேண்டும் என்
உயிர்த்தமிழ்ச் சிசுக்களை
உணர்வுக்கு உசுப்பேற்றி
உறவு கொள். .......!
- பிரியத்தமிழ் -