உண்மை

தங்க விலை சரிவு ...
ஏழை பெண் வாழ்வில் பரிவு ...

@@@@@@@@@@@@@@@@@@@

தக்காளி விலை உயர்வு ...
வயிற்றில் காளி(லி) பாய்வு ....

@@@@@@@@@@@@@@@@@@@@

நகை கிடைத்தது மருமகனுக்கு ....
புன்னகை மறைந்தது(தொலைந்தது) மாமனாருக்கு ....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நாற்று நட்டேன் மழை நம்பி ...
மழை வந்தது ...
நாற்றை காணவில்லை ...

@@@@@@@@@@@@@@@@@

எம்மதமும் சம்மதம்
எழுதினேன் ...
பிள்ளையார் சுழியுடன் ....

@@@@@@@@@@@@@@@@@@

ஜாதிகள் இல்லையடி பாப்பா ...
பாடிய பாரதி நாட்டில் ...
ஜாதி சான்றிதழ் பாப்பாவிற்கு ....

@@@@@@@@@@@@@@@@@@@@@@

வைரஸ் காய்ச்சல்
ஊரில் வந்தால் என்ன ?
என் கணினியில்
வைரஸ் தாக்கவில்லையே ...
என்கிறது மனிதம் ...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பாகு எடுக்க
அம்மா கூப்பிட ...
பாகுபலி
பார்க்கும் மகள் ...
நான் வேலையாக
இருக்கிறேன் என்று
அதட்டுகிறது ....

@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Dec-15, 6:47 pm)
Tanglish : unmai
பார்வை : 360

மேலே