பூட்டிய வீடும் பொம்மைகளும்

தரையினில் கப்பலோட்டுகிறேன்
தண்ணீரில் காரோட்டுகிறேன்
யானைமீது பவனி வருகிறேன்
புலிகளோடு சண்டையிடுகிறேன்
இரயில் வண்டிக்கு குரல்தருகிறேன்
நிதமும் வீடுகட்டுகிறேன்...
நாகரிக வாழ்வுக்குள்
வந்தமந்தவர்களே
பூட்டிய வீட்டினுள்
கொஞ்சம் என்னை
பொம்மைகளுடனாவது
விளையாட விடுங்களேன்...!
------------------------------------------------------
:: குமரேசன் .கி ::