கிராமத்து மாமன்

கதிரறுக்கும் வேளையில
மச்சான் அங்கே வாரையில
பாழாப்போன கண்ணுகிட்ட
சொல்லிப்பார்த்தேன் கேட்கவில்ல
மச்சானை மட்டும் பார்க்கையில
வெட்டருவா கைய கிழிக்கையில
வலி எந்தன் கையிலில்ல
நெஞ்சில்தானே....

ஆத்து நீரில் தான் குளிச்சு
ஆவாரம்பூ தலையில் முடிஞ்சு
உன்ன பார்க்க ஓடி வந்தேன் ஓடையப்போல

கண்ணால என்ன பார்க்க
காலம் நேரம் கூடவில்லையா
ஓடையில ஆடும் இலையாய் தத்தளித்தேன்

தென்ன ஓலை குடிசை கட்டி
என்ன அதுல உக்காரவச்சி
ஊர கூட்டி சோறு போட்ட மறந்தியா என் மாமா

பதினெட்டு வருஷமாக
காத்துவச்ச புதையலத்தான்
கன்னமிட்டு களவு செய்யேன் என் மாமா

பஞ்சாரதுக்குள்ள போட்ட
பெட்டை கோழி ஆகிப்போனேன்
அச்சாரத்து தேதி கேட்டு காத்திருக்கேன்

ஊருக்குள்ள எத்தனை பொண்டுக
பேருக்கொன்னு கையில புள்ளைங்க
கூறுகெட்ட மாமன் உனக்கு தெரியலையா

வெள்ளாவியாய் நானும் கொதிக்க
உன்னாவியை சேர துடிக்க
வெள்ளந்தியாய் திரியிறியே என் மாமா...........

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (10-Dec-15, 7:20 pm)
Tanglish : kiramaththu maaman
பார்வை : 370

மேலே