உறைக்கற்கள்

”உறைக்கற்கள்”

கால் காசுக்கு
பெறாதவனாம்!

கால் தூசுக்கும்…
சமானமில்லையாம்!

நாயை விடவே
கீழானவனாம்!

காதலிக்கவும்
மறுத்தாள் மங்கை!

அடுக்கடுக்காய்
அவமானங்கள்!

அவமானங்களையே…
அடிக்கற்களாக்கி!
உழைப்பை
மூலதனமாக்கி
முன்னேறினேன்!


ஏற்றத்திற்கான
உறைக்கற்களானவர்கள்
கரங்களோடே…..
கைக்குலுக்குகிறேன்!…

கே.அசோகன், திருவள்ளுர்

எழுதியவர் : கே. அசோகன் (10-Dec-15, 7:44 pm)
பார்வை : 76

மேலே