காதலில் சுதந்திர தாகம்

அழகு
வசீகரிக்கும்
காந்தப்புள்ளி
அவள்!

இரும்பாய்
இருந்ததால் தான்
என்னை ஈர்த்தால்
அவள்!

இரும்பும் காந்தமும்
இறுக்கத்தை
தக்க வைக்கும்
கணங்கள்
பார்வை படும்
தருணங்களாய்
பரிதவிக்கும்
காதல்

வேண்டாதவர்கள்
சிலரின்
எதிர் காற்று பட்டு
நழுவுகின்றது;

மறுபடியும்
ஒரு தருணம்
வர வரம் வேண்டி
விழையும்
எங்கள் இரு மனங்களிலும்
காதல் விடும்
ஏக்கப்பெருமூச்சுக்களுக்கு

என்று தணியும்
சுதந்திர தாகம்,
என்று மடியும்
எதிர் காற்றின் மேல்
இருக்கும் எங்கள் அடிமை மோகம்?

எழுதியவர் : செல்வமணி (11-Dec-15, 11:23 pm)
பார்வை : 88

மேலே