நீ தந்த வலி
என் மடிதனை
தலையணை ஆக்கி
நீ களைப்பாறிய நாட்கள் ...
உன்னை பிரியும் நேரத்தில்
சிறுபிள்ளையாய் அடம்பிடித்து
உன் அணைப்பில் ஆறுதல்
அடைந்த நாட்கள் ...
என் மீது சாரல்
விழாமலிருக்க
உன் மீது சாய்த்துக்கொண்டு
குடையாய் நீ
இருந்த நாட்கள் ...
உன்னை கிள்ளும்போது
வலிதாங்காமல் என்
நகம் கடித்து வலி
தந்த நாட்கள் ...
முதலில் நீ சாப்பிடு..
நீ சாப்பிடு என்று
செல்ல சண்டைகள் போட்டு
உணவருந்திய நாட்கள் ...
ரத்தத்தோடு வரும்
என் காயத்திற்கு
கோவத்தோடு வரும்
உன் ஆறுதல்
' உன்னை யார் இதெல்லாம்
செய்ய சொன்னதென்று '
வலியோடு சுகம்
தந்த நாட்கள் ...
போதும் போதும்
என்று நான் சொல்ல
எனக்காக வேண்டும் என்று
கசப்பான மருந்தை
இனிப்பாக புகட்டிய
பரிவான நாட்கள் ...
தாய் சொன்ன
உறவுகளையும்
தந்தை சொன்ன
உறவுகளையும் விட
ஒரு புண்ணிய கயிறு
உன் உறவினை தந்த
பரவசமான அந்த நாள் ...
எதிர்பார்த்தவை எல்லாம்
எதிர்பாராமல் நீ தந்த
வியப்பூட்டும் நாட்கள் ...
இவையெல்லாம் மறந்தே
போய் விட்டது எனக்கு -
எதிர்பாராமல் கடவுள் தந்த
உன் மரணம் ...
கண்கள் இரண்டும்
தீப்பிழம்பாய் எரிந்து
சுண்ணாம்பு குழம்பாய்
கண்ணீரை தருகிறது ...
ஈரைந்து மாதம்பின்
இறக்கிவிடும் தாயைப்போல்
ஓரைந்து ஆண்டுபின் நீயும்
என்னை இறக்கிவிட்டாயா ...?
காதல் தோல்வி எனும்
தனிமையில் ...!!!