அவள் கண்ணீரில் கரைந்தேன்

அவள் பின்னே,

காற்றா டியாய் அலைய விட்டாள்
பனிக் கூழாய் கரைய விட்டாள்
ஒரு நாள் திருநாள் ஆனது
திரும்பி விட்டாள் திடீ ரென.

திக்கு முக்காடி திகைத்து நின்றேன்
அருகில் வந்து ஐ லவ் யு என்றால்
அசந்து விட்டேன் அந்த கணம்
அவளின் நகைப்பு ; எனக்கு திகைப்பு.

பறந்தோம் பறவையாய் ; திரிந்தோம் திரியாய்
அன்று பனிக்கூலாய் கரைய விட்டவள்
இன்று பள்ளிக் குழந்தையாய் அழவிட்டாள்
காரணம், கரைந்து விட்டது காசு.

பேசினால் விடியும் வரை அல்ல
அவளால் முடி யும் வரை
முடிந்து விட்டது என் பணம்
நொந்து விட்டது என் மனம்.

அணைந்து விட்டது அலை பேசி
தொலைத்து விடலாமோ தொலை பேசியை??
ஒலித்தது தொலை பேசி மணி
இல்லை! இல்லை! அது சனி .

எடுத்து வைத் தேன் எயரில்
அவள் ஒலித் தால் ஒயரில்
ஏன் அணைத்தாய்? எதற்கு அணைத்தாய்?
நானா இல் லவே இல்லை !!

எனக்கு அவ்வாய்ப்பு கிட்டவே இல்லை
என்ன உளறு கிறாய்? மறுபடியும்
தொடக்கத் திலிருந்து தொடங் கினால்
ஏன் ? எதற்கு ? என்ற வாறு.

ஆரம்பித் தேன் அமைதி யாக
அணைக்க வில்லை, அணைந்து விட்டான்
அவனே உயிர் இல்லாமல் என்று
இல்லை ! இல்லை ! நம்பவில்லை அவள் .

அப்பொழுது என்னை மாற்றிய நீ
இப்பொழுது என்னை ஏ மாற்றுகிறாய்
ஏன்? என்று தொடங்கி அழுதுவிட்டாள்
வார்த்தை இல்லை ஆறுதல் கூற.

என் மனம் என்னிடம் இல்லை
அழுது விட்டேன் அக் கணமே
என்னை அறி யாமலே எதற்கு?
ஏன் என்று தெரிய வில்லை.

ஏ மாற்ற நினைத்த என்னை
மாற்றி விட்டால் அந்தக் கண்ணீரில்!
அழுது கொண்டி ருக்கிறேன் நான்
ஆறுதல் கூற ஆள் இல்லாமல்.

எழுதியவர் : செல்வா.மு (12-Dec-15, 8:11 am)
பார்வை : 282

மேலே