சிந்தனை
சிந்திக்க தெரிந்த மனிதா - உன்
சிந்தனை என்ன பெரிதா;
விடலை பசங்கள் விவரமெல்லாம் - உன்
விழித்திரையில் தெரிதா ;
வாண்டுகள் எல்லாம் வளந்துபுட்டா - உன்
வம்சம் கூட வளரும்;
பொண்டுக புள்ள வளந்த்புட்டா - உன்
புருவம் கூட உயரும்;
கண்ணகி போல பொண்ணுங்க எல்லாம்
கதையில தான் கண்டேன்;
புன்னகையோட போறதெல்லாம்
புருவம் கீழ கண்டேன்;
பார்வையால பார்த்துப்புட்டா
அந்த கால பொண்ணு ;
பர்சு மேல பார்வைவைப்பா
இந்த கால பொண்ணு;
வாழ இடம் தேடி நீயும்
வானம் வரை போரே;
வழுக்கி விழுந்த வேட்டிக்கூட
மறந்துப்புட்டு போரே;
நிலாச்சோறு தின்னப்போ
நிம்மதியா இருந்தே;
விழாச்சோறு தின்னுப்புட்டு
வீதியில கெடந்தே;
நெடு நெடுவா வளந்திருக்கு
வீதியெல்லாம் வீடு;
நெஞ்சிக்குள ஒன்னுமில்ல
வளர்ந்திருக்கு கூடு