கோ மகன்கள் - ஆனந்தி
சவ மேட்டில் எரிபவனின்
எலும்பு கூடும் நிமிர்ந்து நின்று
கேட்கிறது
அன்றைய நாளின் மிதக்கும்
பனிக்கட்டியோடு கூடிய
மது நிறைந்த கோப்பையை.......
மறுநாள் தொடுவதில்லை
வினோத சபதம் காலை
டாஸ்மாக் திறக்கும் முன்னரே
வந்து காத்திருக்கையில்
முடிந்து விடுகிறது......
வாழும் போதே எரியும் வரம்
பெற்றவர்கள் இவர்கள் தானோ........
நாதியற்று வீதிகளில் கிடந்தும்
வெட்கமுற்று இவர்கள்
மனம் நொந்ததாய்
வரலாறு இல்லை.
குடித்து வாழ பிறந்த கோமகன்கள்
என்பதினாலோ.......
அவதரித்தார்கள் புவிதனில்
தெருக்களில் மதுவை
விளம்பரபடுத்திடவா........
ஒவ்வொரு மதுப்புட்டியின்
பின்னணியிலும் துயரசாபம்
தூக்கமற்ற ஓர் குடும்பத்தின்
பின்னிரவு.......