புகை
விலை கொடுத்து வலையில் சிக்கினேன்
நிமிடக்கணக்கில் நட்புக்கொண்டேன்..
என் எஜமானுக்கு உன்னத அடிமையானேன்
என்னோடு சேர்த்து என் உறவுகளுக்கும் கற்றுக்கொடுத்தேன்...
காற்றுக்கு நிறமில்லை என்று அறிந்தும்
கருப்புக்காற்று கேடு என்று தெரிந்தும் தொடர்ந்தேன்..
மணம் வீசும் வாய் கண்டு முகம் சுளிக்கும் மனைவியின் மனதறியேன்
பணம் வீசி நோய் கேட்டு முகம் மலரும் என் மனதறிவேன்...
நித்தம் நித்தம் நிக்கோட்டின் கேட்கும்
நிறுத்தமுடியா ஆசைக்கு என்ன செய்து பசி தீர்ப்பேன்...
நாளுக்கு இருபதென இருபதில் தொடங்கி
நாப்பதை தொடமுன்னமே கருகிய கல்லீரல் சொன்னது
நான்கு பேர்க்கு சொல் நாளை உன் நாளென...
புகையாக வந்த பகைவன் சொல்லவில்லை
என் குழந்தையின் கல்விக்கு செலவளிக்கச்சொல்லி
என் மனைவியின் காதுக்கு கம்மல் தரச்சொல்லி..
என் மரணத்தருவாயில் உடல்கள் செயலிழந்து போக
உள்ளம் சொன்னது புகையாக வந்த நண்பன் பகைவன் என்று
என்றோ நீ புரிந்திருந்தால் அனாதையாகப்போகும்
உன் குடும்பத்துக்காவது பயனுள்ளவனாக இருந்திருக்கலாமென...