நினைவுகள்
* உன் நினைவுகளை அழிக்க நினைத்தேன்
என் மனதிலிருந்து, இப்பொழுது தான் தெரிகிறது
உன் நினைவுகளை அழித்தால் என் மனமே
அழிந்து விடும் என்று!!!
* சிறு மழை சாரலில் நனைந்த நேரம்
உன் விரல் தீண்டியதாய் ஒரு நினைவு.
* எனக்குள் உணர்வாய் நீ இருப்பதால் தான்
நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளுடன்
*கவிதை எழுத நினைத்து
எழுதுகோலை எடுக்கிறேன்,
உன் நினைவுகள் தான் பரிசாக கிடைகிறது.