மௌன மொழி
![](https://eluthu.com/images/loading.gif)
என்றோ எவரோ செய்த புண்ணியத்தால்
எல்லையின்றி வாரி வழங்கும் வருணபாகவன் ...!!!
ஏரிகளையும் குளங்களையும்
ஏசி கட்டிடம் ஆக்கிய பின்
ஏர் உழ நிலமில்லை ......
கதிரவன் மறைந்து விட்டான் ..
கைக் கொடுக்க எவருமில்லை ..
வணிகத்தை வளர்த்த நாம்
மனிதத்தை வளர்க்கவில்லை ..
வான்நோக்கி பறந்த நாம்
மண்நோக்கி பார்த்திருந்தால் .....????
வனங்களை அழித்தோம்
வளங்களையும் சேர்த்தே ....!!!
கணநேரம் சிந்தித்து இருந்தால்
காற்றுக்கும் போட்டிருக்கலாம் வேலி ......!!!!