மனிதன்

மனிதன்!
யானைகள் மெல்லவே நடக்கும்
மதம் பிடிக்காதவரை!
மீன்களோ துள்ளி குதித்தே
தூண்டிலுக்கும் இரையாகும்.!
பறவைகளோ..காற்றின் துணையோடு
சிறகடித்து பறக்கும்!
கடூர புலியோ கடும் பசியில்தான்
பாய்ந்து இரையெடுக்கும்!
சிங்கமோ..சோம்பியே
தேடி வரும் இரையை
சுகமாய் கபளிகரம் செய்யும்!
வட்டமடிக்கும் வல்லூறோ…
சிறு பறவைகளைத்தான்
கொத்தி போகும்!
பாம்புகளோ…அதன் வழியில்
பட்டால்தான்
பட்டென குத்திடும்!
. இதெல்லாம்
எல்லோருக்கும்
தெரியுமே!
புரிந்து கொள்ள இயலா …
பிறவி மனிதன்தானே!
--- கே. அசோகன்.