பாசப் பிணைப்பு

அன்றலர்ந்த ஆம்பலாய்
துளிர்த்திருக்கும் மனசு
இன்று ஏனோ
அனலகப்பட்ட புழுவாய்
தவிக்கிறது. ....

தாக மேலீட்டால்
தட்டி விட்டேன் உடனே
'துண்டிக்கப்பட்டது தொடர்பு '
முடியும் என்றா. .....
ஏன் ஏன் ஏன்
தொற்றிக் கொண்டாய்
ஒற்றழுத்து அட்டையாய்

ஆனாலும். ...
ஏன் உரைத்தாய் விடியலில். ...
உன் நொடிகளை
வீணாக்குகின்றேனா ...
விடை பகரு.

வாழ்வின் அழுத்தங்களை
அணைத்து வழிவிட்ட
உன் வார்த்தை ஒத்தடங்கள்
பொய்யோ.........
என் அன்பு இளவலே
துடிப்பில் உறைந்து
ஏங்கித் தவிப்பது
மெய்யோ...........

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (16-Dec-15, 11:18 pm)
Tanglish : paasap pinaippu
பார்வை : 411

மேலே