உனக்காகவே என் காதல்
திசைகள் எத்தனை
இருந்தும் என்ன பயன் ..?
உன் தரிசனம் தரவில்லை
அத்தனையும்...
-----------------------------------------------------------
திக்குத் தெரியாத இருளில்
தட்டுத் தடுமாறி நடந்தே
நாட்களை நகர்த்துகிறேன்,
சூரியன் தொலைத்த பூமியாய்..
----------------------------------------------------------
என் கன்னங்களின் வழியில்
முத்தங்கள் சேர்க்காமல்
கண்ணீரின் வழியில்
காதலைக் கோர்க்கிறாய்..
----------------------------------------------------------
அதிகம் உன்னில் அன்பு
வைத்ததனால் தானோ..,
அழ வைக்கிறாய்
என்னை தினம்...
-----------------------------------------------------------
சிறகுகள் தந்தாய்...
விரித்து பறந்திடத்தானோ
என நினைத்திட்ட நேரம்
பறித்து செல்கிறாய்,..
-----------------------------------------------------------
பசித்தவன் பழஞ்சோறு புசித்து
ருசி காணுவது போல்
உன் நினைவுகளின் ருசியில்
பசியாறுகிறேன்..
----------------------------------------------------------
ஓர் வார்த்தையில் எனை - வாழ
வைக்கும் வல்லமை கொண்டவன்
மௌனம் கொள்வதின்
ஞாயம் தான் என்ன?..
----------------------------------------------------------
வான்நிலவுக்கு உரிமைகோரும்
வையகத்து வரம் அது
மல்லிகைக்கு மறுக்கபடினும்
மலரத் தான் மறுக்குமா
மல்லிகை காதலும்..!
=====================================
==================================
================================