ஒன்று படு தமிழா

விழிகளை தானம் செய்த பின்புதான்
விளக்கேற்றினார்கள்
விழிகளை இழந்தவனிடமே ஓவியம் வரைய சொன்னார்கள்
உரக்க சத்தமிட்டு அழுதேன் உரிமை பறிபோகிறது என்று மௌனமானார்கள்
வழிகளின் தாக்கத்திலிருந்து
விடுபட்ட போதுதான் ஆறுதல் உரைத்தார்கள்
எல்லாம் இழந்த பின்புதான்
அல்லோலப்பட்டு அழுதார்கள்
வென்று விடாத போது தான்
ஒன்று பட முயற்சிக்கின்றார்கள் முன் வரவில்லை