அவளொரு தேவதை -கார்த்திகா
முகம் நனைக்கும்
பனிக்காற்றில்
மிதந்திடும் வெண்பந்தை
மடி ஏந்திக் கொண்ட
அடர் நீலம்
கூட்டம் கூட்டமாய்
கண் சிமிட்டல்கள்
செல்லமாய் மின்னல்
இதழ் சுளிப்புகள்
இமையென முகில் மூடி
நட்சத்திர படுக்கையில்
துயில் கொள்கிறாள்
நிலவு தேவதை!!