வருவாள் தமிழானவள்

* தேவதையாக அவளல்ல ;
வெண்ணிலவு முகமல்ல...
கிளிபோல பேச்சல்ல ;
தேனூறும் உதடல்ல...!

* அமுதம் வழியும் கன்னம் அல்ல ;
மேகம் வாழும் கூந்தல் அல்ல ...
ஒடியும் கொடியாய் இடையும் அல்ல ;
அன்னம் தோற்கும் நடையும் அல்ல ...!

* மானோ மீனோ - ஜன்னலில்
மின்னல் தானோ...

கற்பனையாய் கவியல்ல
கம்பனெல்லாம் பெரிதல்ல ...!

* இயல்பான ஓரழகு ;
இணையற்ற தாயழகு...

தமிழான மனதழகு - தன்னை
தருவாளோ நானழகு ...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (18-Dec-15, 4:48 pm)
பார்வை : 67

மேலே