காதல் வந்தது

வந்ததே.. வந்ததே..
என்னுள் இன்று வந்ததே!
வானவில் போலவே..
வாழ்வே வண்ணம் ஆனதே!!

பெண்ணே உந்தன் புண் சிரிப்பு,
உன் அழகிய பெயரின் உச்சரிப்பு,
இதையே வேண்டுது என் மனசு..

சூரியன் கண்ட பனித்துளிப் போல்,
உன் பார்வைப் பட்டதும் உருகிவிட்டேன்..!
உன் புன்னகை என்னும் சிறையினிலே..
ஆழுள் கைதி ஆகிவிட்டேன்!!

நாளும் பேசி மகிழ்ந்திருந்தோம்..
இரண்டுள் ஒன்றாய் வாழ்ந்திருந்தோம்,
இன்று கை தொடும் தூரத்தில் நீ இருந்தும்,
உனைத் தொட எனக்கேன் உரிமையில்லை??

உன் கோவம் தாங்க வலிமை இல்லை..
உனைப் பிரிந்தே.. எனக்கிங்கு வாழ்க்கையில்லை

உன் கைவிரல் கோர்த்தே நான் இருந்தேன்..
விலகிட நினைத்தாய்.. நான் இறந்தேன்..
அழுதாய் சிரித்தாய் நாள் தோறும்..
பெண்ணே உன் மனம் நிறம் மாறும்!!

வந்திடு வந்திடு என்னவளே...
என் மனதைத் திருடிச் சென்றவளே..!
அன்பைக் காட்டிச் சென்று விட்டாய் .
ஏனடி என்னுயிர் கொயித்து விட்டாய்.?

போதும் போதும் உன் விளையாட்டு,
இனிதே நல்வழி நீ காட்டு..!!

எழுதியவர் : நேதாஜி (19-Dec-15, 1:51 pm)
Tanglish : kaadhal vanthathu
பார்வை : 179

மேலே