என்னவளதிகாரம்--நீ ஓர் தேவதை
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே
உன்னை
தூரிகையில்
ஓவியமாய் தீட்ட முற்பட்டேன்
ஏழு
வர்ணங்கள் போதவில்லை...!
உன்னை
காகிதத்தில்
கவிதையாய் தீட்ட முற்பட்டேன்
தமிழ்
வார்த்தைகள் போதவில்லை...!
உன்னை
இரவினில்
என்கனவில் தீண்ட முற்பட்டேன்
அதிகாலை
கனவின் நீட்சி போதவில்லை...!
உன்னை
என்னுள்
காதல் சிறையிட முற்பட்டேன்
என் இதயம் போதவில்லை...!
உன்னை
எனக்கென
கரம் பிடிக்க முற்பட்டேன்
என்னாயுள் போதவில்லை...!
ஏனென்றால்
...நீ ஓர் தேவதை...
....என்னவளதிகாரம்...
இவன்
பிரகாஷ்