இவளின் புனைபெயர்

இவள் நிலவாம்..
நினைப்புத்தான் இவளுக்கு..!

ஓயாமல் அலையடித்து கொண்டே
இருக்கின்றதே.. மனதுக்குள்ளே.
கடல் என்று பெயர் வைத்தால்...??
சுனாமி வந்துவிட்டால்..!
பழிபாவம் யார் சுமப்பது.. ?

ம் ம்... விடாமல்
பொழிகின்றனவே சோகங்கள்..!
மழை என்று பெயரிட்டால்..?
வேண்டாம்..! ஊர் மழை வெள்ளம் தாங்கினாலும் விழி வெள்ளத்தை
வெள்ளத்தை தாங்காது..

சரி. . புயல் என்று பெயரிட்டால்..?? ? சுழன்று கொண்டிருக்கும் நினைவுக் காற்றிக்கு ஆறுதலாய் அமைந்திருக்கும்..!
புயலை நலம் விசாரிக்க
யாருக்குத் தான் துணிவு உண்டு??

இவள் நிலவாகவே இருந்து விட்டு போகட்டும்...
எட்டமுடியாத கனவுகள் தரும்
கானல் நீர்களுக்கு..!
இவளும் நிலவும் சாட்சிதான்...

எழுதியவர் : இவள் நிலா (19-Dec-15, 7:25 pm)
பார்வை : 139

மேலே