இராமர் சொன்ன பொய்

இராமன் சொன்ன பொய்
என்ன தலைப்பைப் படித்தவுடனே அதிர்ச்சியா?
இராமரா, பொய் சொன்னாரா? எப்படி?...எப்படி? என கேட்பது புரிகிறது.
இதோ அதற்கான விளக்கம்....
கைகேயின் வரத்தால் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போக ஏற்பாடு செய்து, காட்டிற்கு செல்லும் நேரம். மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்.
தசரதன் அழுது புலம்பி கொண்டிருந்தார். இதற்கு காரணமான மந்தரை என்னும் கூனி, கைகேயியை மக்கள் குறை சொன்னார்கள். குறை சொல்லி பயனில்லை. இராமரைக் காட்டுக்கு அனுப்புவதில் அவர்கள் வெறும்கருவியாக மட்டுமே அப்போது இருந்தனர்.
இலட்சுமணணுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. வாக்குவாதம் செய்தும் பலனில்லை.
இராமர் காட்டுக்கு புறப்பட்ட பொழுது, அயோத்தி மக்கள் எல்லோருமே இராமரைப் பின் தொடர்ந்தனர். தேர் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.
பின்னால் இருந்து குரல் ”சுமேந்திரரே, இரதத்தை நிறுத்தும், சுமேந்திரரே, இரதத்தை நிறுத்தும்.. என குரல், தசரத சக்ரவர்த்தியிடம் இருந்து வந்து கொண்டிருக்க
இரதத்தை வேகமாக செலுத்து...இன்னும் வேகம்..” என இராமன் சொல்ல, தேரோட்டி சுமேந்திரருக்கு இருதலைக் கொள்ளியாக... அப்பா, மகனுக்கிடையே ஊசலாடிக் கொண்டு இருந்தார்.
மறுபடியும், இராமனிடம் இருந்து...
இரதத்தை வேகமாக ஓட்டுங்கள்” என்று சொல்லி விட்டு...
ஏன் இரதத்தை நிறுத்தவில்லை என்று தசரத சக்ரவர்த்தி கேட்டால் ”நீங்கள் நிறுத்த சொன்னது என் காதில் விழவில்லை” என்று சொல்லுங்கள் என்றார் இராமன்.
அன்று இரவு தமசா நதிக்கரையில், தம்பி இலட்சுமணன், சீதை ஆகியோருடன் தங்கினர்.
மக்கள் பின்தொடர்ந்து வந்து அங்கேயும் தங்கி விட்டனர். .
சுமேந்திரரே, தம்மை பின்தொடர்ந்து வந்த மக்கள் கண்விழிப்பதற்குள் நாம் தேரில் ஏறி சென்று விடலாம்.
அப்படியும் மக்கள் கண்விழித்து கொண்டால், நாம் ஆயோத்திக்கு திரும்புவதுபோல பாவனை செய்துவிட்டு பின்னர் காட்டிற்கு போய் விடலாம்.
இப்படியாக, சுமேந்திரரிடம் பொய் சொல்ல சொன்னதும், மக்களை திசைத் திருப்ப பாவனை செய்ததும் சத்தியவந்தன் இராமன் செய்த செயல்களா? என வியப்பீர்கள்.
அவர் செய்தது, சுயநலத்தால் அல்ல. தந்தை தசரத சக்ரவர்த்தி குரல் கேட்டு, இரதத்தை நிறுத்தி இருந்தால், அவர் வற்புறுத்தி ஆயோத்திக்கு திரும்ப அழைத்து கொண்டு போய் விடுவாரோ? என்ற அச்சத்திலும்
அதே போன்று மக்களும் தம்மைக் கட்டாயப்படுத்தி, அன்பினால் வசப்படுத்தி அயோத்திக்கு திரும்ப செல்ல நேரிட்டால்.....
இந்த காரணங்களுக்காகத்தான் இராமர் அப்படி நடந்து கொள்ள நேரிட்டதாம்.
இதைத்தான் வள்ளுவ பெருந்தகையும், தவிர்க்க முடியாது நேரத்தில் பிறருக்கு ஆபத்து விளைவிக்காத வரை பொய்யுரைக்கலாம் என்று கூறி உள்ளாரே. வள்ளுவரின் வழியைத்தானே இராமர் கடைப்பிடித்துள்ளார்

திருக்கோளுர் ரகசியங்கள்”
என்ற நூலில் இருந்து ——- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (19-Dec-15, 8:46 pm)
பார்வை : 278

சிறந்த கட்டுரைகள்

மேலே