பாடல் -முஹம்மத் ஸர்பான்
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி எனும் பாடல் ராகத்தில்
பெண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களால் நீ பேச
என் வெட்கம் உடைகின்றது.
ஒரு கவிதையும் சிறுகதை ஆகின்றது.
தோளோடு நான் தூங்க
முத்தங்கள் நீ தந்திட
இவள் வெட்கமும் தொலைதூரம் மறைகின்றது.
ஆண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களில் நீ தோன்ற
என் விம்பம் பார்க்கின்றேன்
என்னுள்ளம் அவளுக்குள் துடிக்கக் கண்டேன்.
மெளனத்தால் நீ பேசிட
புரியாமல் தவிக்கின்றேன்.
தலை ஆட்டு பொம்மை போல் அசைகின்றனே
பெண்--->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆண்--->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆண்--->நீ தூங்கிடும் அறையின் ஜன்னலில்
தினமும் என் கண்கள் ஒளிகின்றது.
பெண்--->நீ ஏங்கிடும் காதல் கனவினில்
என் உடலும் சேலை மாற்றியது.
ஆண்--->இமை மூடும் சப்தத்தில் வெல்வாய் பெண்ணே
முகம் மூடும் திரையால் கொல்வாய் பெண்ணே
பெண்--->உன் அருகினில் இல்லாமல் தொலைதூரம்
போனேன் அன்பே காதல் அன்பே
ஆண்--->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
பெண்--->கனவில் மிதக்கிறேன் பூவால் குளிக்கிறேன்
மாற்றம் செய்தது நீ தானடா
ஆண்--->தூக்கம் தொலைக்கிறேன் என்னை தேடினேன்
உனது முகம் மட்டும் தெரிகின்றதே
பெண்--->உன் நெஞ்சில் தலை வைத்து தூக்கம் கொண்டேன்
உன் முத்தத்தில் கண் விழித்து ஏக்கம் கொண்டேன்
ஆண்--->என் நெஞ்சோரம் இரட்டிப்பு சப்தங்கள்
கேட்டேன் அன்பே காதல் அன்பே
பெண்--->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆண்--->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆண்--->கண்களால் நீ பேச
என் வெட்கம் உடைகின்றது.
ஒரு கவிதையும் சிறுகதை ஆகின்றது.
பெண்--->கண்களில் நீ தோன்ற
என் விம்பம் பார்க்கின்றேன்
என்னுள்ளம் அவளுக்குள் துடிக்கக் கண்டேன்.
பெண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை