மானிடம் வெல்லும்

சாலையில் புரண்டது மழையால் வெள்ளம்
பதைபதைத்தது மாந்தர் உள்ளம்
பெருக்கெடுத்தது அன்பு வெள்ளம்
எந்த நிலையிலும் மானிடம் வெல்லும்
சாதி ஒழிந்தது மதம் மறந்தது
இருப்பவன் இல்லாதவன் பேதம் அகன்றது
யாவரும் கேளிர் என்பது நின்றது
துயர் துடைத்து மானிடம் வென்றது
இல்லத்தில் மூன்று வாகனம் என்றார்
வெள்ளம் பெருகிடப் படகில் சென்றார்
செருக்கும் மிடுக்கும் எங்கே சென்றது
இறுதியில் இங்கே மானிடம் வென்றது
உண்ண உணவில்லை இருக்க இடமில்லை
விண்ணை நோக்கி உணவுக்காக நீண்ட கரங்களில்
ஏழையின் கரம் எது செல்வந்தன் கரம் எது
அன்னமிட்ட கரங்களில் மானிடம் வென்றது
இறைவன் படைப்பில் யாவரும் சமம்
என்பதை மனிதன் மறந்தது நிஜம்
அதை உணர்த்திட இயற்கை புகட்டிய பாடம்
உணர்ந்த வேளையில் வென்றது மானிடம்

எழுதியவர் : சாந்தி பாலா (20-Dec-15, 6:19 pm)
பார்வை : 173

மேலே