அழகழகான குழுந்தைகள்

அழகழகான குழந்தைகள்
தூரிகையாற்
மன சுவற்றில்
எழுதி வைத்த
எழிலோவிய
காதலன்
மணமுடித்தான்
மற்றொருவளை…..
மறுகி துடித்து
மோசமானேன்
என்றே
புரண்டு புலம்பினேன்!
மாதங்கள் பல
கடந்த பின்னே!
காணலானேன்
காதலனை
மனைவி” மாசமாய்”
இருப்பதாக இனிப்பாய்
சொன்னார்
எழிலோவிய காதலன்
மறுவிநாடியே
முடிவெடுத்தேன்
மாறுவதென…..
மாறினேன்!
மாறியவுடனே
மாலை மாற்றி
கொண்டேன்!
நானும்…..தொடர்ந்து
”மாசமானேன்”
அத்தனையும்
அழகழகான
”குழந்தைகள்”
குழந்தைகள்
அத்தனையுமே…
”கவிதைகள்தான்”
மாலை மாற்றி
கொண்டது….
தமிழுக்கு தானே!
---- கே. அசோகன்.